விடுப்பு முடிந்தது
Nov 23rd 2007pithanUncategorized
ஒரு தேர்வு எழுதுவதற்காக சிறிது காலம் பதிவுலகிலிருந்து விடுப்பு எடுக்க நேர்ந்து விட்டது.பித்தன் அல்லவா?எல்லாப் பைத்தியக்காரத்தனங்களும் செய்வான்.
விடுப்பு முடிந்து வந்துவிட்டேன்.இடுகைகள் தொடரும்.
நல்லதையே பேசுவோம்
Nov 23rd 2007pithanUncategorized
ஒரு தேர்வு எழுதுவதற்காக சிறிது காலம் பதிவுலகிலிருந்து விடுப்பு எடுக்க நேர்ந்து விட்டது.பித்தன் அல்லவா?எல்லாப் பைத்தியக்காரத்தனங்களும் செய்வான்.
விடுப்பு முடிந்து வந்துவிட்டேன்.இடுகைகள் தொடரும்.
Nov 6th 2007pithanUncategorized
சில ஆண்டுகளாக எனக்கு ஒரு பழக்கம்; நான் தொலை பேசும்போதோ அல்லது யாரிடமிருந்தாவது தொலைபேசி அழைப்பு வரும்போதோ தொலைபேசியை எடுத்ததும் நான் “ஹலோ” என்று சொல்வதில்லை.”ஓம் நமச்சிவாய” என்றே சொல்கிறேன்.இந்தப் பழக்கம் எப்படி ஆரம்பித்தது என்று தெரியவில்லை.அலகாபாத் நகரில் பணி புரியும்போது என் கீழ் பணி புரிந்த ஒரு அதிகாரி கேட்டார் அது குரு மூலம் பெற்ற மந்திரோபதேசமா என்று.நமச்சிவாய என்று சொல்வதற்கு உபதேசம் ஏதும் தேவையில்லை என நான் நினக்கிறேன்.தொலைபேசியில் நான் அவ்வாறு சொல்லும்போது நானும் பயன் பெறுகிறேன்;கேட்கும் மற்றவரும் பயன் பெறுகிறார்.இப்போதெல்லாம் நான் நண்பர்களுக்குத் தொலைபேசும்போது அதை எடுப்பவர்கள் என் நண்பரிடம் “ஓம் நமச்சிவாய” பேசுகிறார் என்றே சொல்கிறார்கள்!என்னைப் பார்த்து என் உறவினர் ஒருவர் “திருச்சிற்றம்பலம்” எனச் சொல்லத் தொடங்கி விட்டார்.
சின்மயா மிஷனைச் சேர்ந்தவர்கள் தொலை பேசியில்”ஹரி ஓம்” என்றே சொல்கிறார்கள்.சாயி பக்தர்கள்”சாய்ராம்”என்கிறார்கள்.இஸ்கானைச் சேர்ந்தவர்கள்”ஹரே கிருஷ்ணா”எனத் தொடங்குகின்றனர்.என் நண்பர் ஒருவர் “வாழ்க வளமுடன்”என்று சொல்கிறார்.
என் எண்ணமெல்லாம் அனைவரும் இந்த அர்த்தமற்ற ‘ஹலோ’வை விட்டு ஏதாவது நல்ல சொல்லாகச் சொல்லலாமே என்பதுதான். என்னவெல்லாம் சொல்லலாம்?
1)அன்பே சிவம்
2)இந்த நாள் இனிய நாள்
3)அன்பு வணக்கம்
4)தமிழ் வாழ்க/வெல்க
5)வந்தே மாதரம்
இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.அவரவர் கற்பனையைப் பொறுத்தது.
முயன்று பாருங்களேன்.